இந்து எழுச்சி முன்னணி ஆர்ப்பாட்டம்


இந்து எழுச்சி முன்னணி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 Jan 2022 4:01 PM GMT (Updated: 12 Jan 2022 4:01 PM GMT)

தேனியில் இந்து எழுச்சி முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி: 

கம்பத்தில் ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளர் ரவிக்குமார் தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை கைது செய்ய வலியுறுத்தி தேனி பழைய பஸ் நிலையம் முன்பு இந்து எழுச்சி முன்னணியினர் நேற்று காலை ஆர்ப்பாட்டம் செய்ய திரண்டனர். நிறுவன தலைவர் பொன்.ரவி தலைமையில் நூற்றுக்கணக்கானவர்கள் அங்கு திரண்டு வந்தனர். 

இதனால், போலீஸ் துணை சூப்பிரண்டு பால்சுதிர் தலைமையில் போலீசார் அங்கு பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டனர். ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றவர்களிடம் துணை சூப்பிரண்டு பேச்சுவார்த்தை நடத்தினார். தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டை நடந்து வருவதாகவும், 3 நாட்களில் சம்பந்தப்பட்ட நபர்கள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீசார் உறுதி அளித்தனர். 

இதனால் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டாம் என்று போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து 5 நிமிடம் மட்டும் தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி பேசிவிட்டு கலைந்து போவதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். 

அதன்படி கோரிக்கையை வலியுறுத்தியும், ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளரை தாக்கிய நபர்களை கைது செய்ய வலியுறுத்தியும் நிறுவன தலைவர் பொன்.ரவி பேசினார். இதில் மாவட்ட தலைவர் ராமராஜ், மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். சிறிது நேர ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.


Next Story