தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-
குண்டும், குழியுமான சாலை
கோவை திருச்சி ரோடு ரெயின்போ காலனி அருகில் மேம்பாலம் தொடங் கும் பகுதியில் சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி காயத்துடன் தப்பிச்செல்லும் நிலை நீடித்து வருகிறது. எனவே அந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
குப்புராஜ், கோவை.
மின்கம்பங்களில் படர்ந்த கொடிகள்
கூடலூர் ஹெல்த்கேம்ப், அரசு மேல்நிலைப்பள்ளி, கெவிப்பாரா, மேல் கூடலூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள மின்கம்பங்களில் காட்டுக் கொடிகள் படர்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக அடிக்கடி மின்தடை மற்றும் குறைந்த மின் அழுத்த பிரச்சனை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் மின்கம்பங்களில் படர்ந்துள்ள காட்டு கொடிகளை அகற்ற வேண்டும்.
நசீர், கூடலூர்.
தினத்தந்தி செய்தி எதிரொலி:
தெருவிளக்குகள் சரிசெய்யப்பட்டன
சூலூர் பேரூராட்சி அலுவலகம் முதல் போலீஸ் நிலையம் வரை தெருவிளக்குகள் ஒளிராமல் இருந்தது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வந்தனர். இது குறித்து தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியிடப்பட்டது. அதன்பேரில் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து பழுதாகி இருந்த தெருவிளக்குகளை ஒளிர செய்தனர். எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி.
மணிகண்டன், சூலூர்.
மதுவிற்பனை அமோகம்
சூலூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட கலங்கல் பகுதியில் சட்டவிரோதமாக மதுபானங்கள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிந்தும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுப்பது இல்லை. இதனால் மது குடித்துவிட்டு வருபவர்கள் சாலையில் நடந்து செல்பவர்களிடம் தகராறு செய்கிறார்கள். எனவே மாவட்ட போலீஸ் நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து இங்கு மது விற்பனை நடப்பதை தடுக்க வேண்டும்.
சதீஷ், கலங்கல்.
ஒளிராத தெருவிளக்குகள்
கோவை கணபதி மணியக்காரபாளையம் வாசவி வீதியில் 5 மின்விளக்குகள் ஒளிரவில்லை. இதனால் இரவில் அங்கு இருள்சூழ்ந்து காணப்படுவதால், அந்த வழியாக செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் சட்டவிரோத செயல்களும் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஒளிராத விளக்குகளை ஒளிர செய்ய வேண்டும்.
வரதராஜன், மணியக்காரபாளையம்.
தெருநாய்கள் தொல்லை
கோவை மாநகர எல்லைக்கு உட்பட்ட ராமநாதபுரம், ஒலம்பஸ் 80 அடி சாலை, உக்கடம் சிங்காநல்லூர் உள்பட பல்வேறு பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இரவு பணி முடிந்து வீடு திரும்பு பவர்கள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராணி, கோவை.
குடிநீர் குழாயில் உடைப்பு
பொள்ளாச்சி பல்லடம் சாலையில் உள்ள கள்ளிபாளையம் பிரிவில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் சாலையில் தண்ணீர் வீணாக செல்கிறது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு சரிவர குடிநீர் கிடைப்பது இல்லை. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்ய வேண்டும்.
ராமச்சந்திரன், டி.கோட்டாம்பட்டி.
விபத்தை ஏற்படுத்தும் குழி
பொள்ளாச்சி-பாலக்காடு சாலையில் வடுகபாளையம் பிரிவில் ரெயில்வே மேம்பால பணிகள் நடந்து வருகிறது. இதனால் இங்குள்ள சர்வீஸ் சாலை யில் வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால் இந்த சாலையில் பாதாள சாக்கடைக்கான ஆள் இறங்கும் குழி பழுதடைந்து காணப்படுகிறது. எனவே இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி காயத்துடன் தப்பிச்செல்லும் நிலை நீடித்து வருகிறது. எனவே அதை சரிசெய்ய வேண்டும்.
முருகன், பொள்ளாச்சி.
கழிவுநீர் தேக்கம்
பொள்ளாச்சி தபால்நிலையம் முன்பு கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளதால் தொற்றுநோய் பரவும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, கழிவுநீர் தேங்குவதை தடுக்க வேண்டும்.
கண்ணன், சின்னம்பாளையம்.
பழுதான தபால்பெட்டி
கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் சாலையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு அருகே தபால் பெட்டி வைக்கப்பட்டு உள்ளது. இந்த பெட்டி பழுதடைந்ததால் அவை திறந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் அதில் தபால் போட்டாலும் அவை சேருவது இல்லை. இதனால் அந்த தபால் பெட்டி இருந்தும் வீணாகதான் உள்ளது. எனவே அதிகாரிகள் அந்த பழுதான தபால் பெட்டியை சீரமைக்க வேண்டும்.
ஹரிஹரன், கோவை.
Related Tags :
Next Story