ஓய்வு பெற்ற என்ஜினீயர் தலைமையில் விசாரணை


ஓய்வு பெற்ற என்ஜினீயர் தலைமையில் விசாரணை
x
தினத்தந்தி 12 Jan 2022 10:04 PM IST (Updated: 12 Jan 2022 10:04 PM IST)
t-max-icont-min-icon

சுருளியாறு நீர்மின்நிலைய ராட்சத குழாயில் உடைப்பு குறித்து ஓய்வு பெற்ற என்ஜினீயர் தலைமையில் விசாரணை நடந்தது.

தேனி : 

தேனி மாவட்டம் வண்ணாத்திப்பாறை வனப்பகுதியில் சுருளியாறு நீர் மின் நிலையம் அமைந்துள்ளது. இங்கு மேகமலை, ஹைவேவிஸ், இரவங்கலாறு அணை நீர்த்தேக்கங்களிலிருந்து 15 கிலோமீட்டர் தூரத்திற்கு ராட்சத இரும்பு குழாய் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இங்கு ஒரு ஜெனரேட்டர் மூலம் வினாடிக்கு 35 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படுகிறது. ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே பராமரிப்பு பணிகள் நடைபெறும். இந்நிலையில் கடந்த ஆண்டு  செப்டம்பர் 4-ந்தேதி மாலை இரவங்கலாறு அணையிலிருந்து மின்உற்பத்திக்கு வரும் தண்ணீர் குழாயில் திடீரென்று உடைப்பு ஏற்பட்டு மலைப்பகுதியில் தண்ணீர் கசிந்து ஆறாக ஓடியது. 

இதனால் கடந்த 5 மாதங்களாக மின்உற்பத்தி செய்யப்படவில்லை. இந்திலையில் கடந்த 5 மாதங்களுக்கு பிறகு சுருளியாறு மின்நிலையம் மற்றும் ஹைவேவிஸ் அலுவலகங்களில் கடந்த 4 நாட்களாக ஓய்வு பெற்ற மேற்பார்வை என்ஜினீயர் ரவி தலைமையில் விசாரணை நடைபெற்றது.

 விசாரணையில், கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு சரிசெய்யப்படவில்லை என்றும், இதனால் அதே இடத்தில் செப்டம்பர் 4-ந்தேதி மீண்டும் உடைப்பு ஏற்பட்டது தெரியவந்தது. மேலும் மாதந்தோறும் அதிகாரிகள் ஆய்வு செய்யவில்லை என்றும், விரைவில் சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story