மாவட்ட செய்திகள்

9 மயில்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டனவா? + "||" + Were 9 peacocks poisoned

9 மயில்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டனவா?

9 மயில்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டனவா?
9 மயில்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டனவா?
கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே வடபுதூர் பாரதி நகரை சேர்ந்த விவசாயி குப்புசாமி. இவரது வாழை தோட்டத்தில் இறந்த மயில்கள் புதைக்கப்பட்டு இருப்பதாக பொள்ளாச்சி வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு வனத்துறையினர் விரைந்து சென்றனர். பின்னர் 3 இடங்களில் குழி தோண்டி பார்த்தபோது ஒரு ஆண் மயில், 8 பெண் மயில் என 9 மயில்களின் உடல்கள் புதைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. மேலும் அந்த இடத்தில் அரிசி சிதறி கிடந்தது. 

உடனே கால்நடை மருத்துவ குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள், மயில்களின் உடல்களை பரிசோதனை செய்தனர். அந்த மயில்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டனவா? என்று வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த தோட்டத்தின் உரிமையாளர் குப்புசாமி தலைமறைவாகி உள்ளார். அவரை தேடி வருகின்றனர்.