கோவையில் பா.ஜனதாவினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவையில் பா.ஜனதாவினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
x
தினத்தந்தி 12 Jan 2022 11:06 PM IST (Updated: 12 Jan 2022 11:06 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் பா.ஜனதாவினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை

பஞ்சாப் மாநிலத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்த மாநில அரசு உரிய பாதுகாப்பு அளிக்கவில்லை என்று கூறி, நாடு முழுவதும் பா.ஜனதா கட்சியினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் நேற்று கோவை சிவானந்தாகாலனி பகுதியில் கோவை மாநகர் மாவட்ட பா.ஜனதா கட்சி சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதற்கு பிற்படுத்தப்பட்டோர் அணி மாவட்ட தலைவர் சுதாகர் தலைமை தாங்கினார். இதில் தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம் கலந்து கொண்டு பேசினார். 

 அப்போது, பிரதமர் நரேந்திர மோடிக்கு உரிய பாதுகாப்பு அளிக்க தவறிய பஞ்சாப் மாநில முதல்-அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். மேலும் நாட்டின் பிரதமருக்கான பாதுகாப்பு குளறுபடி தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் எந்தவித கண்டனமும் தெரிவிக்காதது வருத்தம் அளிக்கிறது என்றார். 

இதில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் நந்தகுமார், தேசிய செயற்குழு உறுப்பினர் கார்வேந்தன், மாவட்ட பொதுச்செயலாளர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story