மாவட்ட செய்திகள்

லட்சுமிநரசிம்மர் கோவிலில் பெண் வேடம் அணிந்து பாசுரம் பாடிய ஆண் பக்தர்கள் + "||" + Male devotees disguised as women and singing hymns at the Lakshminarasimhar Temple

லட்சுமிநரசிம்மர் கோவிலில் பெண் வேடம் அணிந்து பாசுரம் பாடிய ஆண் பக்தர்கள்

லட்சுமிநரசிம்மர் கோவிலில் பெண் வேடம் அணிந்து பாசுரம் பாடிய ஆண் பக்தர்கள்
கூடாரம் வெல்லும் நிகழ்ச்சியாக ஆண் பக்தர்கள் பெண் வேடம் அணிந்து கிராமத்தில் உள்ள வீதிகளில் பாசுரம் பாடிய ஆண் பக்தர்கள் பின்னர் கோவிலை வந்தடைந்தனர்.
மீஞ்சூரை அடுத்த வெள்ளிவாயல்சாவடி கிராமத்தில் ரங்க பராங்குச பரகால ராமானுஜர் கோவிலில் லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மார்கழி மாதம் அதிகாலையில் திருப்பாவை பாசுரம் பாடுவதுடன் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று கூடாரம் வெல்லும் நிகழ்ச்சியாக ஆண் பக்தர்கள் பெண் வேடம் அணிந்து கிராமத்தில் உள்ள வீதிகளில் பாசுரம் பாடிய பின்னர் கோவிலை வந்தடைந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 30 வகையான பிரசாதங்கள் படைக்கப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.