மாவட்ட செய்திகள்

வாகன டிரைவர்களிடம் லஞ்சம் பெற்ற சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு பணியிடை நீக்கம் + "||" + Sub inspector fired for bribery of motorists

வாகன டிரைவர்களிடம் லஞ்சம் பெற்ற சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு பணியிடை நீக்கம்

வாகன டிரைவர்களிடம் லஞ்சம் பெற்ற சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு பணியிடை நீக்கம்
வாகன டிரைவர்களிடம் லஞ்சம் வாங்கிய சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு ஆகிய 2 பேரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் உத்தரவிட்டார்.
கோவை

நெடுஞ்சாலைகளில் நின்றுகொண்டு வாகன டிரைவர்களிடம் லஞ்சம் வாங்கிய சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு ஆகிய 2 பேரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் உத்தரவிட்டார்.

வாகன டிரைவர்களிடம் லஞ்சம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட மீன்கரை ரோடு, இரட்டை கண் பாலத்தின் அருகில் போலீசார் சிலர் நின்றுகொண்டு அந்த வழியாக செல்லும் வாகனங்களை நிறுத்தி சோதனையில் ஈடுபடுகின்றனர்.

அப்போது உரிய ஆவணங்களை காண்பித்தாலும், போலீசார்   டிரைவர்களிடம் லஞ்சம் வாங்குவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினத்துக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. 

சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்

இந்த புகாரின் பேரில், உரிய விசாரணை நடத்த போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அவர்கள் நடத்திய விசாரணையில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மதிசேகரன், போலீஸ் ஏட்டு சரவணன் ஆகிய 2 பேர் வாகன சோதனை என்ற பெயரில் டிரைவர்களிடம் லஞ்சம் பெற்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டுக்கு அறிக்கை தாக்கல் செய்தனர்.

இதைத்தொடர்ந்து சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதிசேகரன், ஏட்டு சரவணன் ஆகிய 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் உத்தரவிட்டார். மாவட்டத்தின் மற்ற பகுதிகளிலும் இதுபோன்று புகார்கள் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
----------------