ஒரே நாளில் 66 பேருக்கு கொரோனா


ஒரே நாளில் 66 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 13 Jan 2022 4:24 PM GMT (Updated: 13 Jan 2022 4:24 PM GMT)

பொள்ளாச்சி பகுதியில் ஒரே நாளில் 66 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி பகுதியில் ஒரே நாளில் 66 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொரோனா பரவல்

பொள்ளாச்சி பகுதிகளில் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக மீண்டும் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் கடந்த 2 நாட்களாக தினசரி எண்ணிக்கை 50-யை தாண்டி விட்டது. பொள்ளாச்சி நகராட்சியில் 24 பேருக்கும், வடக்கில் 9 பேருக்கும், தெற்கில் 12 பேருக்கும், ஆனைமலையில் 7 பேருக்கும், கிணத்துக்கடவு ஒன்றியத்தில் 12 பேருக்கு, சுல்தான்பேட்டையில் 2 பேருக்கும் சேர்த்து பொள்ளாச்சி பகுதியில் மொத்தம் 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் 73 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று(நேற்று முன்தினம்) ஒரே நாளில் 24 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது. இதில் 21 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்ற 3 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுகின்றனர்.

290 பேருக்கு பரிசோதனை

இந்த நிலையில் தொற்று பாதித்த நபர்களுடன் தொடர்பில் இருந்த நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதேபோன்று அறிகுறிகள் உள்ள நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி நகராட்சி பகுதிகளில் 290 பேரிடம் இருந்து பரிசோதனைக்காக சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உள்ளன. 

தொற்று பாதித்த பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். பொதுமக்கள் பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story