வைகுண்ட ஏகாதசியையொட்டி காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் ரத்ன அங்கி சேவை


வைகுண்ட ஏகாதசியையொட்டி காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் ரத்ன அங்கி சேவை
x
தினத்தந்தி 14 Jan 2022 2:20 PM GMT (Updated: 14 Jan 2022 2:20 PM GMT)

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு உற்சவர் தேவராஜ சுவாமி ரத்ன அங்கி சேவையில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்ய பெற்றதும், அத்திவரதர் பெருவிழா புகழ் பெற்றதுமானது காஞ்சீபுரத் தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில். இங்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் வைகுண்ட ஏகாதசி திருநாளன்று மட்டும் உற்சவர் தேவராஜசுவாமி ரத்ன அங்கியில் பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. 

மார்கழி மாத வைகுண்ட ஏகாதசியை அத்திகிரி மலையிலிருந்து ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவர் வரதராஜ பெருமாள் ரத்ன அங்கி சேவையில் கோவில் வளாகத்தில் உள்ள கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளினார். ரத்ன அங்கி சேவையில் உற்சவர் வரதராஜ பெருமாளையும், பெருந்தேவித்தாயாரையும் பக்தர்கள் பலரும் தரிசனம் செய்தனர். முன்னதாக பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடந்தன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கோவலுக்குள் பக்தர்கள் அதிக அளவில் அனுமதிக்கப்படவில்லை.


Next Story