தொட்டிலில் இருந்து தவறி விழுந்து 11 வயது சிறுமி பலி


தொட்டிலில் இருந்து தவறி விழுந்து 11 வயது சிறுமி பலி
x
தினத்தந்தி 16 Jan 2022 3:47 AM IST (Updated: 16 Jan 2022 3:47 AM IST)
t-max-icont-min-icon

துடியலூர் அருகே தொட்டிலில் இருந்து தவறி விழுந்து 11 வயது சிறுமி பலியானாள்.

துடியலூர்

துடியலூர் அருகே தொட்டிலில் இருந்து தவறி விழுந்து 11 வயது சிறுமி பலியானாள்.

11 வயது சிறுமி

கோவை துடியலூர் அருகே பன்னிமடை கடைவீதியை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 39). இவருடைய மனைவி தமிழ்செல்வி(37). இவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் இருந்தனர். அதில் 2-வது மகள் ஸ்ரீமதி(11), அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்த நிலையில் நேற்று முன்தினம் பொங்கல் பண்டிகையையொட்டி விடுமுறை விடப்பட்டு இருந்தது. இதனால் வீட்டில் இருந்த ஸ்ரீமதி, தொட்டில் கட்டி விளையாடி கொண்டு இருந்தாள்.

சிகிச்சை பலனின்றி...

அப்போது எதிர்பாராதவிதமாக தொட்டிலில் இருந்து தவறி கீழே விழுந்தாள். இதனால் அவளுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக அவளை மீட்டு தாளியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் ஸ்ரீமதி, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டாள். 

அங்கு அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி ஸ்ரீமதி பரிதாபமாக உயிரிழந்தாள். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து சின்னதடாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story