பொள்ளாச்சி பகுதியில் 82 பேருக்கு கொரோனா

பொள்ளாச்சி பகுதியில் 82 பேருக்கு கொரோனா
பொள்ளாச்சி
தமிழகத்தில் கடந்த 2 வாரங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க அரசு ஊரடங்கு உள்ளிட்ட பல நடவடிக்கை எடுத்துவருகிறது. இந்தநிலையில், நேற்று பொள்ளாச்சி நகரத்தில் 42 பேர், பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் 16 பேர், தெற்கு ஒன்றியத்தில் 24 என மொத்தம் 82 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து, பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வரும்போது கட்டாயம் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, தடுப்பூசி போடுவது, கைகளை அடிக்கடி கிருமிநாசினி கொண்டு கழுவுவது, கபசுர குடிநீர் அருந்துதல் போன்ற செயல்களையும், அரசின் விதிமுறைகளையும் பொதுமக்கள் கைவிடாமல் முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும். என, சுகாதாரத் துறையினர், வருவாய்துறையினர் பொதுமக்களிடம் வலியுறுத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






