மல்லிகாபுரத்தில் ரூ.4 லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில், தென்னேரி ஊராட்சி மன்ற தலைவராக வெற்றிபெற்ற கலையரசி முனிராஜ் பதவியேற்றதும் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் உடனுக்குடன் நிறைவேற்றி தரப்படும் என வாக்குறுதி அளித்தார்.
வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக தென்னேரி ஊராட்சி மன்ற தலைவர் கலையரசி முனிராஜ், தனது சொந்த செலவில் தென்னேரி ஊராட்சி மல்லிகாபுரத்தில் ரூ.4 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் கலந்து கொண்டு குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், செல்வராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் முனிராஜ், வார்டு உறுப்பினர்கள் ரேவதி ஜெயக்குமார், தேவி முரளி, அ.தி.மு.க. நிர்வாகிகள் அக்ரி கே.நாகராஜன், மார்க்கெட் வி.அரிக்குமார், நாயக்கன்குப்பம் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story






