பெண் போலீஸ் தவறவிட்ட நகையை ஒப்படைத்த வாலிபர்


பெண் போலீஸ் தவறவிட்ட நகையை ஒப்படைத்த வாலிபர்
x
தினத்தந்தி 18 Jan 2022 8:05 PM IST (Updated: 18 Jan 2022 8:05 PM IST)
t-max-icont-min-icon

பெண் போலீஸ் தவறவிட்ட நகையை ஒப்படைத்த வாலிபர்


கோவை

கோவை ஆயுதப்படையில் பெண் போலீசாக பணிபுரிபவர் கவிதா தேவி. சம்பவத்தன்று இவர் பொருட்கள் வாங்க காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டிற்கு குடும்பத்தினருடன் சென்றார். 

பின்னர் வீட்டிற்கு சென்று பார்த்த போது அவருடைய கழுத்தில் அணிந்திருந்த 2½ பவுன் தங்க சங்கிலியை காணவில்லை. 

இது குறித்து அவர் காட்டூர் போலீசில் புகார் அளித்தார். இந்த நிலையில் பீளமேடு பகுதியை சேர்ந்த சுரேஷ் ஷாம் எட்வர்டு (வயது34) என்பவர் சாலையில் கிடந்த 2½ பவுன் தங்க நகையை எடுத்து காட்டூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். 

 விசாரணையில் அது ஆயுதப்படை பெண் போலீஸ் கவிதாதேவி தவறவிட்ட நகை என்பது தெரியவந்தது. 

நகையை கண்டெடுத்து ஒப்படைத்த சுரேஷ் ஷாம் எட்வர்டை உதவி கமிஷனர் வின்சென்ட் பாராட்டினார். 

பின்னர்  கவிதா தேவியிடம் நகையை சுரேஷ் ஷாம் எட்வர்டு ஒப்படைத்தார்.  அவரை போலீசார் பாராட்டினர்.

1 More update

Next Story