கோவை ஆவாரம்பாளையம் மின்மயானம் சாலையில் மேம்பாலத்தின் கீழ் சிக்னல் இல்லாததால் விபத்து அபாயம் ஏற்படுகிறது

மேம்பாலத்தின் கீழ் சிக்னல் இல்லாததால் விபத்து அபாயம்
கோவை
கோவை ஆவாரம்பாளையம் மின்மயானம் சாலையில் மேம்பாலத்தின் கீழ் சிக்னல் இல்லாததால் விபத்து அபாயம் ஏற்படுகிறது. அங்கு போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
சிக்னல் அகற்றம்
கோவை காந்திபுரம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பார்க் கேட் சந்திப்பில் இருந்து காந்திபுரம் ஆம்னி பஸ் நிலையம் வரை முதல் அடுக்கு மேம்பாலமும்,
100 அடி சாலையில் இருந்து சின்னசாமி சாலை மின் மயானம் வரை 2-வது அடுக்கும் மேம்பாலமும் கட்டப்பட்டது.
இதற்காக ஆவாரம்பாளையம் மின்மயானம் அருகே இருந்த சிக்னல் அகற்றப்பட்டது. தற்போது அங்கு மேம்பாலம் அமைக்கப்பட்ட நிலையில் இன்னும் சிக்னல் அமைக்கப்பட வில்லை.
இதனால் அந்த சந்திப்பில் 4 முனைகளிலும் இருந்து வாகனங்கள் தாறுமாறாக வந்து செல்கின்றன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது
ஒழுங்குபடுத்தும் போலீசார்
2 வது அடுக்கு மேம்பால பணிக்காக ஜி.பி. சந்திப்பு, ஆவாரம்பாளை யம் மின்மயானம் அருகே இருந்த சிக்னல்கள் அகற்றப்பட்டன.
மேம்பால பணி முடிந்த சில மாதங்களில் ஜி.பி. சந்திப்பில் சிக்னல் அமைக்கப்பட்டது. ஆனால் மின்மயானம் அருகே இன்னும் சிக்னல் அமைக்கப்படவில்லை.
இதனால் அங்கு காலை 8 மணி முதல் 10 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையும் போக்குவரத்து போலீசார் நின்று வாகனங்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
போக்குவரத்து நெரிசல்
ஆனால் மற்ற நேரங்களில் அங்கு போலீசார் நிற்பது இல்லை. இதனால் 4 சாலைகளில் இருந்து வரும் வாகன ஓட்டுனர்கள் அந்த சந்திப்பிற்கு அருகே தாறுமாறாக செல்கின்றனர்.
இதன் காரணமாக அவ்வப்போது விபத்து ஏற்படுகிறது. சில நேரங்களில் வாகன ஓட்டுனர்கள் இடை யே மோதல் ஏற்படுகிறது.
அது போன்ற நேரங்களில் நீண்ட வரிசையில் அணிவகுத்து போக்குவ ரத்து நெரிசல் எற்படுகிறது.
இதனால் வாகன ஓட்டுனர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் அங்குள்ள மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளும் பாதிக்கப்படுகின்றனர்.
போலீஸ் நியமனம்
எனவே ஆவாரம்பாளையம் மின்மயானம் அருகே மேம்பாலத்தின் கீழ் 4 சாலைகள் சந்திக்கும் இடத்தில் சிக்னல் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதுவரை போக்குவரத்து போலீசாரை நியமித்து போக்குவரத்தை ஒழுங்கு படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story






