நெகமம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேருக்கு கொரோனா


நெகமம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 19 Jan 2022 9:07 PM IST (Updated: 19 Jan 2022 9:07 PM IST)
t-max-icont-min-icon

நெகமம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நெகமம்

நெகமம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்ஸ்பெக்டருக்கு கொரோனா

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து சுகாதாரத்துறையினர் தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் கோவை மாவட்டம் நெகமம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி சிலருக்கு காய்ச்சல், சளி அறிகுறி இருந்தது.
இதையடுத்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

 இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், இஸ்பெக்டரின் கார் டிரைவர் மற்றும் போலீஸ்காரர் ஒருவர் என மொத்தம் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமையில் உள்ளனர். 


கிருமிநாசினி தெளிப்பு 


இதையடுத்து நெகமம் போலீஸ் நிலையத்திற்கு நெகமம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட போலீசாருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு சுகாதாரத்துறையினர் அறிவுரை வழங்கினர். அப்போது, அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று கொரோனா பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டது.

அந்த பகுதி முழுவதும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள், மக்களை தேடி மருத்துவ திட்ட பணியாளர்கள் மூலம் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. 
1 More update

Next Story