கோவை மாநகர போலீசார் 77 பேருக்கு கொரோனா


கோவை மாநகர போலீசார் 77 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 19 Jan 2022 10:11 PM IST (Updated: 19 Jan 2022 10:11 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா 3-வது அலையில் கோவை மாநகரில் இதுவரை 77 போலீசாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

கோவை

கொரோனா 3-வது அலையில் கோவை மாநகரில் இதுவரை 77 போலீசாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

77 போலீசாருக்கு கொரோனா 

நாடு முழுவதும் கொரோனா 3-வது அலை தீவிரமாக உள்ளது. இதனால் நாள்தோறும் ஏராளமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் பொதுமக்களுடன், நேரடி தொடர்பில் உள்ள போலீசாருக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. 

கடந்த 20 நாட்களில் மட்டும் 77 போலீசாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதில் பலர் குணமடைந்து பணிக்கு திரும்பி உள்ளனர்.

 இந்த நிலையில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக கட்டிடத்தில் இயங்கி வரும் குற்ற ஆவண பிரிவில் பணி புரியும் 5 போலீசார், 2 உளவுத்துறை போலீசார், ரத்தினபுரி, வெரைட்டி ஹால் ரோடு போலீஸ் நிலையங்களில் தலா ஒரு போலீசார் என 9 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. 

கிருமி நாசினி தெளிப்பு

இதையடுத்து கமிஷனர் அலுவலகத்தில் உள்ள குற்ற ஆவண பிரிவு அறை தற்காலிகமாக மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதேபோல் கமிஷனர் அலுவலக கட்டிடங்களில் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தப்பட்டது. 

இதேபோல் ஊரக பகுதியில் 30 போலீஸ் நிலையங்கள் உள்ளன. இங்கேயும் தினமும் 5 அல்லது 8 போலீசாருக்கு கொரோனா தொற்று ஏற்படுகிறது. இதில் தீவிர அறிகுறி உள்ளவர்கள் மட்டும் மருத்துவமனை களில் சிகிச்சை பெறுகின்றனர். 

மற்றவர்கள் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்தி கொள்கின்றனர். 3-வது அலையில் போலீசாருக்கு அதிகமாக கொரோனா பாதிப்பு ஏற்படுவதால் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டு வருகிறது.

2 முகக்கவசம்

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, போலீசார் கட்டாயம் 2 முகக்கவசம் அணிய வேண்டும், கைகளை அடிக்கடி கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். 

2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளோம். இணை நோய்கள் இருந்தால் டாக்டரின் ஆலோசனையின் பேரில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று உத்தர விடப்பட்டு உள்ளது என்றார். 

1 More update

Next Story