மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் முககவசம் அணியாதவர்களிடம் விழிப்புணர்வு + "||" + Awareness among non-masked people in Chengalpattu district

செங்கல்பட்டு மாவட்டத்தில் முககவசம் அணியாதவர்களிடம் விழிப்புணர்வு

செங்கல்பட்டு மாவட்டத்தில் முககவசம் அணியாதவர்களிடம் விழிப்புணர்வு
செங்கல்பட்டு மாவட்டத்தில் முககவசம் அணியாத தொழிலாளர்கள்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
செங்கல்பட்டு அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சிக்குட்பட்டது திருத்தேரி பஸ் நிலையம். இங்கிருந்து ஒரகடத்தில் அமைந்துள்ள பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் செல்கின்றனர். மேலும் தனியார் நிறுவன பஸ்களில் பயணம் செய்யும் தொழிலாளர்கள் பலர் முக கவசம் அணிவதில்லை என்று மாவட்ட நிர்வாகத்திற்கு பல்வேறு புகார்கள் வந்தன.

அதன்பேரில் உடனடி நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருவாய் ஆய்வாளர் ராஜேந்திரன், கிராம நிர்வாக அலுவலர் கருணாகரன் ஆகியோர் செங்கல்பட்டில் இருந்து ஒரகடம் நோக்கி சென்ற அனைத்து தனியார் பஸ்களில் ஏறி உள்ளே சென்று அறிவுரை வழங்கினார்கள். மேலும் ஷேர் ஆட்டோக்களில் முக கவசம் அணியாமல் பயணம் செய்த பயணிகளிடமும், டிரைவர்களிடமும் முக கவசத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தொடர்புடைய செய்திகள்

1. செங்கல்பட்டு மாவட்டத்தில் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் தலைமையில் நடைபெற்றது.
2. செங்கல்பட்டு மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைத்தீர்க்கும் நாள் முகாம் மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் தலைமையில் நடைபெற்றது.
3. செங்கல்பட்டு மாவட்டத்தில் பசுமை சாம்பியன் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
4. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 40 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 40 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
5. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 55 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 55 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.