படப்பை அருகே விஷவாயு தாக்கி 2 பேர் சாவு


படப்பை அருகே விஷவாயு தாக்கி 2 பேர் சாவு
x
தினத்தந்தி 20 Jan 2022 6:24 PM IST (Updated: 20 Jan 2022 6:24 PM IST)
t-max-icont-min-icon

படப்பை அருகே கழிவுநீர் தொட்டியில் இறங்கியபோது விஷவாயு தாக்கி 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

கழிவுநீரை அகற்றுவதற்காக...

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த வரதராஜபுரம் பி.டி.சி. நகர் குடியிருப்பு பகுதி 4-வது தெருவில் வசித்து வந்தவர் ஜெயக்குமார் (வயது 38). இவருடைய வீட்டின் கழிவுநீர் தொட்டியில் இருந்த கழிவுநீரை அகற்றுவதற்காக மணிமங்கலம் இந்திராகாந்தி சாலை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (35) சென்றார்.

அவருடன் அவரது நண்பரான செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் பெரியார் தெருவை சேர்ந்த ஏழுமலை (35) உடன் சென்றார். லாரி மூலம் கழிவுநீரை ஏற்றி கொண்ட அவர்கள் பின்னர் கழிவுநீர் தொட்டியி்ல் அடைப்பு உள்ளது. அதை சரி செய்ய வேண்டும் என்று கூறி கழிவுநீர் தொட்டியில் இறங்கி உள்ளனர்.

சாவு

அப்போது விஷவாயு தாக்கி ராஜேஷ், ஏழுமலை இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இது குறித்து மணிமங்கலம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் அவர்களது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story