கோவை வழியாக ரெயிலில் கடத்தி வந்த 7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது


கோவை வழியாக ரெயிலில் கடத்தி வந்த 7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது
x
தினத்தந்தி 20 Jan 2022 8:53 PM IST (Updated: 20 Jan 2022 8:53 PM IST)
t-max-icont-min-icon

கோவை ரெயிலில் 7 கிலோ கஞ்சா பறிமுதல்


கோவை

கோவை வழியாக ரெயிலில் கடத்தி வந்த 7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

சோதனை 

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப் புழாவுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. 

இந்த ரெயிலில் சிலர் கஞ்சாவை கடத்தி வருவதாக ரெயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி.எப்.) போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

அதன் பேரில் கோவை ரெயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் நேற்று காலை 8.15 மணியளவில் கோவை வந்த ரெயிலில் சோதனை செய்தனர்.

அப்போது அந்த ரெயிலில் உள்ள டி-3 பெட்டியில் 1-ம் நம்பர் இருக் கைக்கு கீழே சந்தேகத்துக்கு இடமான வகையில் 7 பொட்டலங்கள் கேட்பாரற்று கிடந்தன. 

7 கிலோ கஞ்சா பறிமுதல்

அதை கைப்பற்றி மூட்டைகளை பிரிந்து பார்த்த போது 7 கிலோ கஞ்சா இருப்பதும், அதை வடமாநிலத்தில் இருந்து கேரளாவுக்கு மர்ம ஆசாமிகள் கடத்தி வந்ததும், 

அவர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடியதும் தெரியவந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் இருக் கும் என்று ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து கஞ்சா பொட்டலங்கள் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. 

இதையடுத்து கஞ்சா கடத்தி வந்தது யார்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 More update

Next Story