170 கிலோ குட்கா பதுக்கியவர் கைது

170 கிலோ குட்கா பதுக்கியவர் கைது
கணபதி
கோவை சாய்பாபா காலனி உதவி கமிஷனர் சுகுமார் உத்தரவின் பேரில் ரத்தினபுரி சப் -இன்ஸ்பெக்டர் கஸ்தூரி, ஏட்டுகள் ஞானவேல், சுகந்தராஜா ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் காந்திபுரம் ஆம்னி பஸ் நிலையம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப் போது மோட்டார் சைக்கிளில் 2 மூட்டைகளுடன் வாலிபர் ஒருவர் வந்தார். அவரை போலீசார் மடக்கி பிடித்து அவரிடம் இருந்த மூட்டைகளை சோதனையிட்டனர்.
அதற்குள் குட்கா பொருட்கள் இருந்தன.
போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர், வெரைட்டி ஹால் பகுதியை சேர்ந்த பெரிய கருப்பன் (வயது 32) என்பதும்,
அவர், சின்னவேடம்பட்டி அஞ்சுகம் நகரில் 170 கிலோ குட்கா பதுக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது.
உடனே போலீசார் அவரிடம் இருந்த குட்கா மூட்டைகள் உள்பட 170 கிலோ குட்கா, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதையடத்து பெரியகருப்பன் கைது செய்யப்பட்டார்.
Related Tags :
Next Story






