போலீசாரை தாக்க நினைக்கும் ரவுடிகளை சுட்டு தள்ளுவோம்: காஞ்சீபுர மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு


போலீசாரை தாக்க நினைக்கும் ரவுடிகளை சுட்டு தள்ளுவோம்: காஞ்சீபுர மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு
x
தினத்தந்தி 21 Jan 2022 7:56 PM IST (Updated: 21 Jan 2022 7:56 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டத்தில் போலீசாரை தாக்க நினைக்கும் ரவுடிகளை சுட்டு தள்ளுவோம் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் தெரிவித்தார்.

சுட்டு வீழ்த்துவோம்

காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டத்தில் சட்டம் - ஒழுங்கு நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் இரவு நேரங்களில், போலீசார் ரோந்து பணியில் செல்லும் போது, கையில் துப்பாகியுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அப்போது சமூக விரோதிகள், ரவுடிகள் யாரேனும் போலீசாரை தாக்க நினைத்தால் சுட்டு வீழ்த்துவோம். காஞ்சீபுரம் மாவட்டத்தில் ரவுடிகள் கொட்டம் அடக்கப்படும். இந்த மாவட்டம் ரவுடிகள் இல்லாத மாவட்டமாக திகழும், வியாபாரிகள் தைரியமாக இருக்கலாம்.

அப்படி யாரேனும் ரவுடிகள் தொடர்ந்து தொல்லை கொடுத்தால், தைரியமாக போலீஸ் நிலையங்களில் புகார் கொடுக்கலாம்.

கந்துவட்டி குறித்தும், தைரியமாக புகார் தெரிவிக்கலாம். மாவட்டம் முழுவதும் இரவு நேரங்களில் ஏ.டி.எம். மையங்களை போலீசார் விழிப்புடன் கண்காணித்து வருகின்றனர்.

நூதன முறையில் திருட்டு

பாலியல் தொந்தரவு கொடுக்கும் நபர்கள் குறித்தும் தைரியமாக புகார் தெரிவிக்கலாம்.

தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின் பேரில், காஞ்சீபுரம் மாவட்டம் எப்போதும் அமைதியாக இருக்கும். பொதுவாக வீட்டில் உள்ள குடும்பத்தினர், வெளியூர் செல்வதாக இருந்தால், அந்தந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் தகவல் தெரிவித்தால், இரவு நேர போலீசார் அந்த வீடுகளை கண்காணிப்பார்கள், மேலும் வங்கிகளுக்கு செல்லும் பொதுமக்களை சில மர்ம நபர்கள் உங்கள் பணம் கீழே உள்ளது என திசைதிருப்பி நூதன முறையில் திருடி செல்கின்றனர்.

இதனால் வங்கிக்கு செல்லும் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story