நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி வார்டுகள் இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி வார்டுகள் இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன
x
தினத்தந்தி 21 Jan 2022 10:12 PM IST (Updated: 21 Jan 2022 10:12 PM IST)
t-max-icont-min-icon

மாநகராட்சி நகராட்சி வார்டுகள் இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன

கோவை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி வார்டுகள் இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

கோவை மாநகராட்சி

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. 

இதில் கோவை மாநகராட்சி மேயர் பதவி மற்றும் வார்டுகள், நகராட்சி தலைவர் பதவி மற்றும் வார்டு கவுன்சிலர்கள் பதவிக்கு 

இட ஒதுக்கீடு அடிப்படையில் யார் போட்டியிடலாம் என்பது குறித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.


இதில், கோவை மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு (பொது) ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. கோவை மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளன. 

இதில், 60, 74, 80, 87, 93 ஆகிய 5 வார்டுகள் ஆதிதிராவிடர் (பொது), 3, 13, 61, 66, 85 ஆகிய 5 வார்டுகள் ஆதிதிராவிடர் (பெண்கள்) ஒதுக்கப்பட்டு  உள்ளது.

பொதுப்பிரிவுக்கு ஒதுக்கீடு

1, 2, 9, 14, 15, 17, 19, 21, 25, 26, 27, 28, 29, 30, 36, 37, 38, 39, 40, 41, 43, 44, 45, 48, 49, 50, 51, 54, 57, 58,, 59, 62, 63, 64, 65, 67, 68, 70, 75, 77, 78, 79, 82, 83, 84  ஆகிய 45 வார்டுகள் பெண்கள் (பொது) ஒதுக்கப் பட்டு உள்ளது.


4, 5, 6, 7, 8, 10, 11, 12, 16, 18, 20, 22, 23, 24, 31, 32, 33, 34, 35, 42, 46, 47, 52, 53, 55, 56, 69, 71, 72, 73, 76, 81, 86, 88, 89, 90, 91, 92, 94, 95, 96, 97, 98, 99, 100 ஆகிய 45 வார்டுகள் பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.

நகராட்சிகள்

கோவை மாவட்டத்தில் மொத்தம் 7 நகராட்சிகள் உள்ளன. இதில், மேட்டுப்பாளையம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. 

இதில், தலைவர் பதவி பெண்களுக்கு (பொது) ஒதுக்கப்பட்டு உள்ளது.

12, 24 ஆகிய 2 வார்டுகள் ஆதிதிராவிடர் (பொது), 13, 25, 33 ஆகிய 3 வார்டுகள் ஆதிதிராவிடர் (பெண்கள்), 1, 3, 4, 6, 8, 14, 16, 20, 23, 28, 29, 31, 32 ஆகிய 13 வார்டுகள் பெண்கள் (பொது) மற்றும் மற்ற 15 வார்டுகள் பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி நகராட்சியில் மொத்த 36 வார்டுகள் உள்ளன. இதில் தலைவர் பதவி பெண்களுக்கு (பொது) ஒதுக்கப்பட்டு உள்ளது.

8, 22 ஆகிய 2 வார்டுகள் ஆதிதிராவிடர்(பொது), 2, 31 ஆகிய 2 வார்டுகள் ஆதிதிராவிடர் (பெண்கள்), 

1, 3, 5, 6, 7, 9, 10, 11, 17, 18, 23, 25, 28, 29, 33, 34 ஆகிய 16 வார்டுகள் பெண்கள் (பொது) மற்ற 16 வார்டுகள் பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.

வால்பாறை

வால்பாறை நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. இதில், தலைவர் பதவி பெண்களுக்கு (பொது) ஒதுக்கப்பட்டு உள்ளது. 

3, 11, 12, 15, 17, 19 ஆகிய 6 வார்டுகள் ஆதிதிராவிடர் (பொது), 6, 7, 8, 13, 16, 18, 20 ஆகிய 7 வார்டுகள் ஆதிதிராவிடர் (பெண்கள்), 

2, 5, 14, 21 ஆகிய 4 வார்டுகள் பெண்களுக்கு (பொது) மற்றும் 14 வார்டுகள் பொதுப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.  

மதுக்கரை

மதுக்கரை நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இதில்  தலைவர் பதவி பெண்களுக்கு (பொது) ஒதுக்கப்பட்டு உள்ளது.

 4, 23 ஆகிய 2 வார்டுகள் ஆதிதிராவிடர் (பொது), 3, 27 ஆகிய 2 வார்டுகள் ஆதிதிராவிடர் (பெண்கள்), 1, 2, 5, 9, 11, 12, 13, 16, 20, 22, 25, 26 ஆகிய 12 வார்டுகள் பொது (பெண்) மற்றும் 11 வார்டுகள் பொதுப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. 

காரமடை

காரமடை நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இதில் நகராட்சி தலைவர் பதவி பொது (பெண்) ஒதுக்கப்பட்டு உள்ளது. 

6, 8 ஆகிய வார்டுகள் ஆதிதிராவிடர் (பொது), 15, 17 ஆகிய வார்டுகள் ஆதிதிராவிடர் (பெண்கள்), 9, 10, 11, 12, 16, 19, 21, 22, 23, 25, 26, 27 ஆகிய வார்டுகள் பெண்கள் (பொது) மற்றும் 11 வார்டுகள் பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.

கருமத்தம்பட்டி

கருமத்தம்பட்டி நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. தலைவர் பதவி  (பொது)  21-வது வார்டு ஆதிதிராவிடர் (பொது), 

1,3 வார்டுகள் ஆதிதிராவிடர் (பெண்கள்), 4, 5, 7, 9, 15, 17, 19, 22, 23, 24, 26, 27 ஆகிய வார்டுகள் பெண்கள் (பொது) ஒதுக்கப்பட்டு உள்ளது.

கூடலூர் கவுண்டம்பாளையம் நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. தலைவர் பதவி (பொது) 23-வது வார்டு ஆதிதிராவிடர் (பொது), 7-வது வார்டு ஆதிதிராவிடர் (பெண்கள்), 1, 2, 3, 4, 5, 8, 10, 13, 14, 19, 22, 25, 26 ஆகிய வார்டுகள் பெண்கள் (பொது) ஒதுக்கப்பட்டு உள்ளது.

1 More update

Next Story