அழிந்து வரும் அரிய வகை மூலிகை செடிகள்


அழிந்து வரும் அரிய வகை மூலிகை செடிகள்
x
தினத்தந்தி 21 Jan 2022 10:24 PM IST (Updated: 21 Jan 2022 10:24 PM IST)
t-max-icont-min-icon

அழிந்து வரும் அரிய வகை மூலிகை செடிகள்

பொள்ளாச்சி

டாப்சிலிப்பில் போதிய பராமரிப்பு இல்லாததால் அரிய வகை மூலிகை செடிகள் அழிந்து வருகின்றன. அவற்றை பாதுகாக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மூலிகை வனம்

ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச்சரகம் டாப்சிலிப் சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. அங்கு யானைகள் முகாம், அருங்காட்சியகம் உள்ளிட்டவை உள்ளன. மேலும் இங்கு சுற்றுலா பயணிகள் மூலிகைகளை பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் அரிய வகை மூலிகை செடிகளை கொண்டு வனம் உருவாக்கப்பட்டது. 

இங்கு உள்ள மூலிகை செடிகள் அங்கு உள்ள மலைவாழ் மக்களுக்கு மருந்தாக பயன்பட்டது. இந்த நிலையில் போதிய பராமரிப்பு இல்லாததால் மூலிகை வனத்தில் உள்ள செடிகள் அழிந்து வருகின்றன. 

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

65 வகையான செடிகள்

டாப்சிலிப்பில் கடந்த 2000-ம் ஆண்டு மூலிகை வனப்பெருக்கம் மற்றும் விளக்க மையம் அமைக்கப்பட்டது. மேலும் அந்த பகுதி மருத்துவ தாவர பாதுகாப்பு பகுதியாக செயல்பட்டு வருகிறது. இந்த மூலிகை வனத்தில் அகத்தியர், போகர், சுந்தரர் உள்ளிட்ட சித்தர்கள் சிலைகளும் வைக்கப்பட்டு உள்ளன. 

பிரம்பி, கீழ்நொச்சி, தும்பை, வலம்புரி, மணத்தக்காளி உள்ளிட்ட 65 வகையாக மூலிகை செடிகள் வைக்கப்பட்டு உள்ளன. மேலும் இங்கு உள்ள மூலிகை செடிகளை மலைவாழ் மக்கள் காய்ச்சல், சளி, சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தி உள்ளனர். 

அழிந்து வருகிறது

மேலும் சுற்றுலா பயணிகளுக்கு மூலிகை செடிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தது. தற்போது போதிய பராமரிப்பு இல்லாததால் அங்குள்ள மூலிகை செடிகள் அழிந்து வருகின்றன. 

எனவே அரிய வகை மூலிகை செடிகளை பாதுகாத்து டாப்சிலிப்பிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வனவிலங்குகள் உள்ளே வருவதை தடுக்க மூலிகை வனத்தை சுற்றி வேலை அமைக்க வேண்டும். இதேபோன்று மலைவாழ் மக்கள் அருங்காட்சி யகத்திலும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

1 More update

Next Story