சரவணம்பட்டியில் விடுதி உரிமையாளரை தாக்கி 2 பெண்களை கடத்திய வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்

சரவணம்பட்டியில் விடுதி உரிமையாளரை தாக்கி 2 பெண்களை கடத்திய வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்
சரவணம்பட்டி
சரவணம்பட்டியில் விடுதி உரிமையாளரை தாக்கி 2 பெண்களை கடத்திய வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
விடுதி உரிமையாளர்
கோவையை அடுத்த மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் பொன்னுச் சாமி. இவருடைய மகன் ஹரிஹரன் (வயது34).
இவர் சரவணம்பட்டி விநாயகபுரம் பகுதியில் விடுதி நடத்திவருகிறார். இங்கு செல்வம் என்பவர் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று அந்த விடுதிக்குள் 7 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் திடீரென்று புகுந்து ஹரிஹரன் மற்றும்
அவரது நண்பர், மேலாளர் செல்வம் ஆகியோரை மிரட்டி அங்கிருந்த செல்போன்கள், லேப்டாப்கள், கண்காணிப்பு கேமராவில் காட்சிகள் பதிவாகும் பெட்டி மற்றும் ரூ.40 ஆயிரம் ஆகியவற்றை பறித்தனர்.
2 பெண்கள் கடத்தல்
இதையடுத்து அங்கு பணியில் இருந்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நர்கிஸ் அக்தர் (26), மராட்டியத்தை சேர்ந்த மிட்டு மகேந்திரா திர்வால் (24) ஆகிய 2 பெண்களையும் கடத்திச் சென்றனர்.
இது குறித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இது குறித்து கோவை கிழக்கு உதவி கமிஷனர் அருண் மேற்பார்வையில் சரவணம்பட்டி இன்ஸ்பெக் டர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
3 பேர் கைது
அவர்கள், தீவிர விசாரணை நடத்தி, கோவை குனியமுத்தூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்த முகமது அன்சாரி என்பவரது மகன் முகமது ஆசிக் (27),
குனியமுத்தூர் பிகே.புதூரை சேர்ந்த ஜெயவேல் என்பவரது மகன் சுதீர்குமார் (28), சுண்டக்காமுத்தூரை சேர்ந்த ஆறுச்சாமி என்பவரது மகன் சதீஷ்குமார் (29) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப் பட்டது. கடத்தப்பட்ட 2 பெண்களும் மீட்கப்பட்டனர். தலைமறைவாக உள்ள 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story






