வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக நம்பர் 4 வீரபாண்டி பேரூராட்சி முன்னாள் தலைவர் கேவிஎன்ஜெயராமன், அவருடைய மனைவி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக நம்பர் 4 வீரபாண்டி பேரூராட்சி முன்னாள் தலைவர் கேவிஎன்ஜெயராமன் அவருடைய மனைவி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்
கோவை
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக நம்பர் 4 வீரபாண்டி பேரூராட்சி முன்னாள் தலைவர் கே.வி.என்.ஜெயராமன், அவருடைய மனைவி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
நம்பர் 4 வீரபாண்டி பேரூராட்சி
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நம்பர் 4 வீரபாண்டி பேரூராட்சியின் தலைவராக கடந்த 2001 முதல் 2016-ம் ஆண்டு வரை இருந்தவர் அ.தி.மு.க.வை சேர்ந்த கே.வி.என்.ஜெயராமன் (வயது 47). இவருடைய மனைவி கீர்த்தி.
கே.வி.என்.ஜெயராமன்.கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட போது, தனக்கு அசையும் சொத்துகள், நகைகள், வங்கி டெபாசிட் என மொத்தம் ரூ.1 கோடியே 25 லட்சத்திற்கு சொத்து இருப்பதாகவும்,
அவை அனைத்தும் தனது பெயரிலும், தனது மனைவி பெயரிலும் இருப்பதாகவும் ஆவணம் தாக்கல் செய்திருந்தார்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து
அதன்பிறகு 5 ஆண்டுகள் முடிந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு அவரின் சொத்து மதிப்பு ரூ.3 கோடியே 43 லட்சமாக உயர்ந்தது.
எனவே 2011- 2016-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அவர் வருமானத்தை விட அதிகமாக ரூ.1 கோடியே 45 லட்சத்திற்கு சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.
அந்த சொத்து மற்றும் நகைகள் அவரது பெயரிலும், மனைவி பெயரிலும் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதைத் தொடர்ந்து கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
வழக்குப்பதிவு
இந்த நிலையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் பேரூராட்சி தலைவர் கே.வி.என்.ஜெயராமன் மற்றும் அவருடைய மனைவி கீர்த்தி
ஆகியோர் மீது கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் அரசு பதவியில் இருந்து கொண்டு முறைகேட்டில் ஈடுபடுதல் 13 (2), மற்றும் 13 (1) (இ) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
Related Tags :
Next Story






