மாமல்லபுரத்தில் நாட்டிய விழா நிறைவடைந்தது


மாமல்லபுரத்தில் நாட்டிய விழா நிறைவடைந்தது
x
தினத்தந்தி 23 Jan 2022 5:18 PM IST (Updated: 23 Jan 2022 5:18 PM IST)
t-max-icont-min-icon

சுற்றுலாத்துறை சார்பில் மாமல்லபுரத்தில் நாட்டிய விழா நேற்றுடன் நிறைவடைந்தது.

2021-22-ம் ஆணடுக்கான ஒரு மாத நாட்டிய விழா கடந்த டிசம்பர் மாதம் 23-ந்தேதி தொடங்கியது. ஒரு மாதம் நடைபெற்ற நாட்டிய விழா நேற்றுடன் நிறைவடைந்தது. ஒரு மாதம் நடைபெற்ற இந்த விழாவில் தினமும் பல்வேறு மாநில நாட்டிய கலைஞர்கள் பங்கேற்ற பரதநாட்டியம், கரகாட்டம், காவடியாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் உள்ளிட்ட கிராமிய கலை நிகழ்ச்சிகள், ஓடிசி, குச்சுபுடி, பெங்காலி நடனம், கதகளி, மோகினியாட்டம், வீணை, புல்லாங்குழல் இசை கச்சேரி உள்ளிட்ட பல கலை நிகழ்ச்சிகள், நாட்டிய நடனங்கள் நடைபெற்றன. நேற்று கடைசி நாள் நிகழ்ச்சியாக சென்னை லதாவினோத் குழவினரின் பரதநாட்டியம் மற்றும் புல்லாங்குழல் இன்னிசை கச்சேரியுடன் நாட்டிய விழா நிறைவு பெற்றது.

நிறைவு விழாவின் முடிவில் பரத நாட்டிய கலைஞர்களுக்கு சுற்றுலாத்துறை இணை இயக்குனர் புஷ்பராஜ் பிரிசுகள் வழங்கி கவுரவித்தார். இந்த நிகழ்ச்சியில் மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் ராஜாராமன், நாட்டிய விழா பொறுப்பாளர் நிஜாமுதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story