மாநில எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனை


மாநில எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனை
x
தினத்தந்தி 23 Jan 2022 5:42 PM GMT (Updated: 23 Jan 2022 5:42 PM GMT)

காட்பாடியில் மாநில எல்லையான கிறிஸ்டியான்பேட்டை சோதனை சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே போலீசார் அனுமதி அளித்தனர்.

காட்பாடி

காட்பாடியில் மாநில எல்லையான கிறிஸ்டியான்பேட்டை சோதனை சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே போலீசார் அனுமதி அளித்தனர்.

முழு ஊரடங்கு

தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

 ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என அரசு அறிவித்தது. அதன்படி நேற்று 3-வது வாரமாக முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

இதையொட்டி காட்பாடி பகுதியில் உள்ள மாநில எல்லையில் போலீசார் தடுப்புகளை கொண்டு சாலைகளை மூடினர். மாநில எல்லையான கிறிஸ்டியான்பேட்டை சோதனைச் சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அனுமதி

அந்த வழியாக வந்த சரக்கு வாகனங்கள் மற்றும் லாரிகள், காய்கறி வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

 மேலும் அத்தியாவசிய தேவைளுக்கு வந்தவர்களுக்கும், திருப்பதியில் இருந்து தரிசனம் முடித்துவிட்டு வந்த பக்தர்களுக்கும் அனுமதி அளித்தனர். தேவையின்றி இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

மேலும் விருதம்பட்டு, சித்தூர் பஸ் நிலையம் போன்ற முக்கிய சாலைகளின் சந்திப்பில் தடுப்புகளை அடைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

காட்பாடி பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. மருந்துக்கடைகள், ஓட்டல்கள் மட்டும் திறந்திருந்தன. 

காட்பாடி ரெயில் நிலையத்திற்கு சென்றவர்கள் பயண டிக்கெட்டை காண்பித்தும், திருமணத்துக்கு சென்றவர்கள் அழைப்பதை காண்பித்தும் சென்றனர்.

காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து ஆந்திரா செல்லும் பயணிகள் ரெயில் நிலையத்தில் இருந்து தமிழக எல்லை வரை நடந்து சென்றனர்.

Next Story