கெட்டுப்போன இறைச்சியை விற்பனை செய்த கடைக்கு ‘சீல்’


கெட்டுப்போன இறைச்சியை விற்பனை செய்த கடைக்கு ‘சீல்’
x
தினத்தந்தி 23 Jan 2022 5:59 PM GMT (Updated: 23 Jan 2022 5:59 PM GMT)

மயிலாடுதுறையில் கெட்டுப்போன இறைச்சியை விற்பனை செய்த கடைக்கு சுகாதார அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

மயிலாடுதுறை:
மயிலாடுதுறையில் கெட்டுப்போன இறைச்சியை விற்பனை செய்த கடைக்கு சுகாதார அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
அதிகாரிகள் சோதனை
மயிலாடுதுறை கூறைநாடு புனுகீஸ்வரர் கீழவீதியில் உள்ள ஒரு இறைச்சிக் கடையில் ஊரடங்கு உத்தரவை மீறி இறைச்சி விற்பனை செய்வதாக நகராட்சி சுகாதார அலுவலகத்திற்கு தகவல் வந்துள்ளது. 
அதன்பேரில் சுகாதார ஆய்வாளர்கள் ராமையன், பிச்சைமுத்து, டேவிட் பாஸ்கர் மற்றும் சுகாதார அலுவலர்கள் அந்த இறைச்சி கடைக்கு சென்று சோதனை செய்தனர். 
இதில் குளிர்சாதனப் பெட்டியில் கடந்த 4 நாட்களுக்கு முன் வெட்டப்பட்ட ஆட்டு இறைச்சி மற்றும் 4 ஆட்டு தலைகள் இருந்தது தெரிய வந்தது. இந்த இறைச்சி ெகட்டுப்போயிருந்தது.
இறைச்சி கடைக்கு ‘சீல்’
இதனையடுத்து குளிர்சாதனப்பெட்டியுடன் ஆட்டு இறைச்சியை சுகாதார ஆய்வாளர்கள் பறிமுதல் செய்தனர். கெட்டுப்போன இறைச்சி விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் அந்த கடையை பூட்டை‘சீல்’  வைத்தனர்.
நகராட்சி சுகாதார ஆய்வாளர் ராமையன் கூறியதாவது:-
முழு ஊரடங்கின் போது இறைச்சி விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி இறைச்சி விற்பனை செய்யபட்டது மட்டும் இன்றி ெகட்டுப்போன இறைச்சி விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த இறைச்சி கடையை பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டு உள்ளது என்றார். 

Next Story