ராப்பத்து உற்சவம் நிறைவு

வடுவூர் கோதண்டராமர் கோவிலில் ராப்பத்து உற்சவம் நிறைவு பெற்றது.
வடுவூர்:
வடுவூர் கோதண்டராமர் கோவிலில் ராப்பத்து உற்சவம் நிறைவு பெற்றது.
ராப்பத்து உற்சவம்
வைணவ கோவில்களில் கொண்டாடப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 3-ந்தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இதன் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் நடை திறப்பு கடந்த 13-ந் தேதி நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து 10 நாட்கள் ராப்பத்து உற்சவம் நடைபெற்றது. இதன் நிறைவாக நம்மாழ்வாருக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
அப்போது நம்மாழ்வாரை கோதண்டராமரின் பாதங்களில் வைத்து துளசியால் மூடி தீட்சிதர்கள் நிகழ்ச்சியை நடத்தினார்கள்.20 நாட்கள் தொடர்ச்சியாக பாடப்பட்டு வந்த நாலாயிர திவ்யபிரபந்தம் பாடல்களின் கடைசி தொகுப்பை பாடி நிறைவு செய்தனர். இதேபோல வடுவூர் மற்றும் சுற்றுவட்டார வைணவ கோவில்களில் 20 நாட்களாக பகல்பத்து ராப்பத்து என நடத்தப்பட்டு வந்த இந்த வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடைந்தது.
Related Tags :
Next Story