தண்டவாளத்தில் ஆண் பிணம்


தண்டவாளத்தில் ஆண் பிணம்
x
தினத்தந்தி 23 Jan 2022 6:58 PM GMT (Updated: 2022-01-24T00:28:18+05:30)

கல்லிடைக்குறிச்சியில் ரெயில் தண்டவாளத்தில் ஆண் பிணம் கிடந்தது.

அம்பை:
கல்லிடைக்குறிச்சி புதிய பஸ் நிலையத்திற்கு எதிரில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் ஆண் பிணம் சிதைந்த நிலையில் கிடப்பதாக கல்லிடைக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தென்காசி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இறந்து கிடந்தவருக்கு 45 வயது இருக்கும். நீல நிறத்தில் கட்டம் போட்ட சட்டையும், வேட்டியும் அணிந்து இருந்தார். அவர் யார், எப்படி இறந்தார்? என்பது பற்றி ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story