நேதாஜி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை

நெல்லையில் நேதாஜி உருவப்படத்துக்கு த.ம.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நெல்லை:
சுதந்திர போராட்ட தியாகி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழா நெல்லையில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி நெல்லை மகாராஜநகரில் அலங்கரித்து வைக்கப்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உருவப்படத்திற்கு நெல்லை மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் இனிப்புகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், மத்திய-மாநில அரசு நேதாஜி பிறந்த நாளை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும். தமிழக அரசு சார்பில் வேய்ந்தான்குளம் புதிய பஸ் நிலையம் அருகில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், திருவள்ளுவர் ஆகியோர் உருவச்சிலை அமைக்க வேண்டும், என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
இந்த நிகழ்ச்சியில் மாநகர பொருளாளர் முருகன், மேலப்பாளையம் பகுதி இளைஞரணி செயலாளர் முத்து, நிர்வாகிகள் மோகன்மள்ளர், வசந்தி, ஷர்மிளா, சுரேஷ்பாண்டியன், சந்தோஷ்பாண்டியன், கண்மணி நிஷா, கண்மணி லலிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story