பவானிசாகர் அருகே தோட்டத்துக்குள் புகுந்த யானைகள்- வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு


பவானிசாகர் அருகே தோட்டத்துக்குள் புகுந்த யானைகள்- வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு
x
தினத்தந்தி 23 Jan 2022 9:35 PM GMT (Updated: 23 Jan 2022 9:35 PM GMT)

பவானிசாகர் அருகே தோட்டத்துக்குள் புகுந்த யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டன.

பவானிசாகர்
பவானிசாகர் அருகே தோட்டத்துக்குள் புகுந்த யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டன. 
20 யானைகள்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இந்த காட்டு யானைகள் இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது தொடர்கதையாக உள்ளது. 
இந்த நிலையில் பவானிசாகர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 20-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் பவானிசாகர் அருகே உள்ள பசுவபாளையம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் முகாமிட்டன. பகல் நேரத்தில் விவசாய தோட்ட பகுதியில் யானைகள் முகாமிட்டதால் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் அச்சம் அடைந்தனர். 
2 மணி நேர போராட்டத்துக்கு...
உடனே அங்குள்ளவர்கள் இதுகுறித்து பவானிசாகர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பட்டாசு வெடித்தும், டிராக்டர்கள் மற்றும் பொக்லைன் எந்திரங்கள் மூலம் ஒலி எழுப்பியும் தோட்டத்தில் புகுந்த யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். 2 மணி நேர ேபாராட்டத்துக்கு பின்னர் 20 யானைகளும் வனப்பகுதிக்குள் சென்றன. 
வனப்பகுதிக்குள் சென்ற யானைகள் மீண்டும் தோட்டத்துக்குள் புகுந்து விடும் வாய்ப்பு உள்ளதால் வனத்துறையினர் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு  வருகிறார்கள்.

Next Story