முழு ஊரடங்கால் வெறிச்சோடிய பழைய மாமல்லபுரம் சாலை

முழு ஊரடங்கால் பழைய மாமல்லபுரம் சாலை வெறிச்சோடி காணப்பட்டது.
வெறிச்சோடியது
தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் தொற்று அதிகரித்து வருவதால் தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை அறிவித்திருந்தது. ஊரடங்கு அறிவித்து 3-வது ஞாயிற்றுக்கிழமையான நேற்று அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியே வர வேண்டும், தேவையில்லாமல் வெளியே சுற்றி திரியக்கூடாது என தமிழக அரசு மற்றும் போலீஸ் துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் முழு ஊரடங்கான நேற்று சென்னை பழைய மாமல்லபுரம் சாலை சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். தேவையில்லாமல் வெளியே சுற்றித் திரிபவர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
குறிப்பாக நேற்று முகூர்த்த நாள் என்பதால் திருமண நிகழ்ச்சிகளுக்கு செல்பவர்களை நிறுத்தி திருமணஅழைப்பிதழ் உள்ளதா என சோதனை செய்த பின்னரே அனுமதித்தனர். பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் பழைய மாமல்லபுரம் சாலை வெறிச்சோடி காணப்பட்டது.
கூடுவாஞ்சேரி
கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி. சாலை சிக்னல் அருகே போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் லோகேஷ் காந்தி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கார், மோட்டார் சைக்கிளில் சென்ற பெரும்பாலானவர்கள் தாங்கள் திருமணத்துக்கு செல்கிறோம் என்று அவர்கள் கையில் வைத்திருந்த திருமண பத்திரிகையை காண்பித்து விட்டு சென்றனர்.
இதேபோல வண்டலூர்-கேளம்பாக்கம், மற்றும் வண்டலூர்-மீஞ்சூர், கூடுவாஞ்சேரி-கொட்டமேடு ஆகிய சாலைகளில் வாகனங்கள் சென்றன.
ெசங்கல்பட்டு
கொரோனா தொற்று காரணமாக செங்கல்ப்பட்டு டவுன், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. செங்கல்பட்டு ராட்டிணக்கிணறு, பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், திருப்போரூர் கூட்ரோடு பரனூர் சுங்கச்சாவடி போன்ற பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு அந்த வழியாக செல்லும் வாகனங்களை கண்காணித்து தேவையின்றி வெளியில் சுற்றிதிரிபவர்களுக்கு அறிவுரைகளையும் கூறி அனுப்பி வைத்தனர்.
இறைச்சி கடைக்காரர்கள்
இறைச்சி கடைக்காரர்கள் ½ கிலோ, ஒரு கிலோ என்ற அளவில் இறைச்சியை எடுத்து சென்று தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வினியோகம் செய்தனர்.
இதுபோல சிங்கப்பெருமாள் கோவிலிலும் முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் அனுமந்தபுரம் சாலை வெறிச்சோடி காணப்பட்டது.
Related Tags :
Next Story






