அரசு அலுவலர்களுடன் கலந்தாய்வு


அரசு அலுவலர்களுடன் கலந்தாய்வு
x
தினத்தந்தி 24 Jan 2022 12:43 PM GMT (Updated: 24 Jan 2022 12:43 PM GMT)

அரசு அலுவலர்களுடன் கலந்தாய்வு

ஊட்டி

ஊட்டியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் குடியரசு தின விழா முன்னேற்பாடுகள் குறித்து அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கி பேசும்போது, ஊட்டி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. 

விழா சிறப்பாக நடைபெறும் வகையில் ஒவ்வொரு துறை அலுவலர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும். கொரோனா பரவல் அதிகமாக உள்ள காரணத்தால் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக கடைபிடித்து குடியரசு தின விழா நடைபெற அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.  கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி  பிரியதர்ஷினி, குன்னூர் சப்-கலெக்டர் தீபனா விஷ்வேஸ்வரி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முத்துமாணிக்கம், ஆர்.டி.ஓ.க்கள் துரைசாமி, சரவண கண்ணன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story