உல்லாசத்திற்கு மறுத்த மனைவி கல்லால் தாக்கி படுகொலை


உல்லாசத்திற்கு மறுத்த மனைவி கல்லால் தாக்கி படுகொலை
x
தினத்தந்தி 24 Jan 2022 12:51 PM GMT (Updated: 24 Jan 2022 12:51 PM GMT)

உல்லாசத்திற்கு மறுத்த மனைவி கல்லால் தாக்கி படுகொலை

மடத்துக்குளம் அருகே உல்லாசத்திற்கு மறுத்த மனைவியை கல்லால் தாக்கி கொன்ற நெசவு தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
உல்லாசத்திற்கு அழைப்பு 
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தை அடுத்த நரசிங்காபுரத்தை சேர்ந்தவர் கணேசன் வயது 58. நெசவுத் தொழிலாளி. இவருடைய மனைவி  ஈஸ்வரி 58. இவர்களது மகன்  தினேஷ்குமார். இவர்   ராஜஸ்தானில் வேலை பார்த்து வருகிறார். நெசவு தொழில் செய்யும் கணேசனுக்கு அவருடைய மனைவி ஈஸ்வரி உதவியாக இருந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தம்பதி இருவரும் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றனர். படுத்த சிறிது நேரத்தில் ஈஸ்வரி தூங்கி விட்டார். ஆனால் கணேசன் தூங்காமல் இருந்தார். அப்போது அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த  ஈஸ்வரியை எழுப்பி உல்லாசத்திற்கு அழைத்து உள்ளார். அதற்கு அவர் ஒத்துக்கொள்ளாமல் மறுத்து உடல் சோர்வாக உள்ளது என்று பிடிவாதம் பிடித்துள்ளார். ஆனால் கணேசன் இப்போது உடனே உல்லாசத்திற்கு வரவேண்டும் என்று வற்புறுத்தி உள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே  வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம்  அவர்களுக்குள் கைகலப்பானது.
கல்லால் தாக்கி கொலை
இதனால் ஆத்திரமடைந்த கணேசன் அருகில் கிடந்த கல்லை எடுத்து மனைவியின் தலையில் போட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதில் பலத்த காயமடைந்த ஈஸ்வரி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். 
இந்த நிலையில் நேற்று காலை நீண்ட நேரமாகியும் ஈஸ்வரி எழுந்திருக்காதலால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் அவரது வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது அங்கு ரத்த வெள்ளத்தில் ஈஸ்வரி இறந்து கிடந்தார். அவருடைய கணவர் கணேசனை அங்கு காணவில்லை. இது குறித்து மடத்துக்குளம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
கணவர் கைது
உடனே  சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து  ஈஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கணேசனை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில்  உல்லாசத்திற்கு அழைத்த போது  ஈஸ்வரி வர மறுத்ததால் கல்லால் தாக்கி கொன்றதாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் கணேசனை கைது செய்தனர். பின்னர் அவரை உடுமலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். .உல்லாசத்திற்கு மறுத்த மனைவியின் தலையில் கல்லை போட்டு கணவன் கொலை செய்த சம்பவம் மடத்துக்குளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story