தர்மபுரியில் கூட்டுறவுத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


தர்மபுரியில் கூட்டுறவுத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 Jan 2022 4:27 PM GMT (Updated: 24 Jan 2022 4:27 PM GMT)

தர்மபுரியில் கூட்டுறவுத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி:
தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் தர்மபுரி கூட்டுறவுத்துறை மண்டல அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் குமார் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகி பழனியம்மாள், மாவட்ட செயலாளர் பாக்கியவதி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுருளிநாதன், மாவட்ட செயலாளர் சேகர், பொருளாளர் புகழேந்தி, வேளாண்மைத்துறை அமைச்சு பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் ஜெயவேல், பொதுநூலகத்துறை ஊழியர் சங்க மாவட்ட தலைவர் குமரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். கூட்டுறவுத் துறை ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். உரிய விதிகளை மீறி செய்யப்பட்ட பணிமாறுதலை ரத்து செய்ய வேண்டும் என்று இந்த ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட துணைத்தலைவர் செல்வகுமார் உள்பட நிர்வாகிகள், கூட்டுறவுத்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Next Story