சாமி தரிசனம் செய்ய குவிந்த வடமாநில பக்தர்கள்

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 3 நாட்கள் தடையை தொடர்ந்து ராமேசுவரம் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வடமாநில பக்தர்கள் குவிந்தனர்.
ராமேசுவரம்,
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 3 நாட்கள் தடையை தொடர்ந்து ராமேசுவரம் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வடமாநில பக்தர்கள் குவிந்தனர்.
தடை
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு முன் னெச்சரிக்கை நடவடிக்கையாக வாரத்தில் வெள்ளி முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாட்கள் பக்தர்கள் கோவிலுக்குள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. 3 நாள் தடை முடிந்த நிலையில் ராமேசுவரம் கோவிலில் வழக்கம்போல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக் கப்பட்டனர்.
சாமி தரிசனம்
கொரோனா பரவல் காரணமாக ராமேசுவரம் கோவிலில் 3 நாட்களுக்கு பிறகு கோவில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் வடமாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் அதிகம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர். தமிழகத்தை சேர்ந்த பக்தர்களின் எண்ணிக்கை மிகமிக குறைவாகவே காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story