ஆற்றில் மூழ்கி நகராட்சி தூய்மை பணியாளர் பலி


ஆற்றில் மூழ்கி நகராட்சி தூய்மை பணியாளர் பலி
x
தினத்தந்தி 24 Jan 2022 5:24 PM GMT (Updated: 2022-01-24T22:54:11+05:30)

மன்னார்குடியில், ஆற்றில் மூழ்கி நகராட்சி தூய்மை பணியாளர் உயிரிழந்தார்.

மன்னார்குடி;
மன்னார்குடியில், ஆற்றில் மூழ்கி நகராட்சி தூய்மை பணியாளர் உயிரிழந்தார். 
தூய்மை பணியாளர்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தெப்பக்குளம் வடகரை காட்டுநாயக்கன் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது57). இவர் மன்னார்குடி நகராட்சியில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று பணியை முடித்து வீட்டுக்கு வந்தவர் வீட்டின் அருகில் உள்ள பாமணி ஆற்றில் குளிக்க சென்றார். 
பரிதாப சாவு
அப்போது ஆற்றில் அதிக அளவு தண்ணீர் சென்றதால் நீரில் மூழ்கி ராஜேந்திரன் உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த மன்னார்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ராஜேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக  மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story