2 வருடங்களுக்கு பிறகு மண்ணச்சநல்லூர் பெண்ணை கரம்பிடித்த இலங்கை வாலிபர்


2 வருடங்களுக்கு பிறகு மண்ணச்சநல்லூர் பெண்ணை கரம்பிடித்த இலங்கை வாலிபர்
x
தினத்தந்தி 24 Jan 2022 6:34 PM GMT (Updated: 24 Jan 2022 6:34 PM GMT)

2 வருடங்களுக்கு பிறகு மண்ணச்சநல்லூர் பெண்ணை கரம்பிடித்த இலங்கை வாலிபர்

சமயபுரம், ஜன.25-
நாமக்கல் மாவட்டம் அரூர் கிராமத்தை சேர்ந்த மகாலிங்கம்-கிருஷ்ணவேணி தம்பதியின் மகன் புஷ்பநாதன் (வயது 26). இவர் தன் பெற்றோருடன் இலங்கையில் உள்ள கோணமுட்டாவ, ஹப்புதலை என்ற பகுதியில் வசித்து வருகிறார்.
புஷ்பநாதன் திருச்சியில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தபோது, திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி கிராமத்தை சேர்ந்த கென்னடி-கமலாதேவி தம்பதியின் மகள் சவுந்தர்யா (24) என்பவரை சந்தித்துள்ளார். அப்போது, இருவரும் ஒருவரை, ஒருவர் விரும்பி பெற்றோரிடம் தெரிவித்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதனிடையே புஷ்பநாதன் இலங்கை சென்றார்.
அதன்பின் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக  புஷ்பநாதனால் இலங்கையிலிருந்து இந்தியா வர முடியவில்லை. அதன்பின் 2 வருடங்களுக்கு பிறகு இந்தியா வரும் வாய்ப்பு கிடைத்தது. இதைத்தொடர்ந்து இந்தியா வந்த புஷ்பநாதன் நேற்று முன்தினம் சவுந்தர்யாவை கரம் பிடித்தார். அவர்களது திருமணம் திருப்பைஞ்சீலியில் உள்ள ஒரு மண்டபத்தில் எளிமையான முறையில் அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி நடைபெற்றது.  கடந்த, 2 வருடங்களாக தடைப்பட்டுவந்த திருமணம் நல்லபடியாக முடிந்ததில் மணமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story