ஒரே நாளில் புதிதாக 742 பேருக்கு கொரோனா; முதியவர் உயிரிழப்பு

ஒரே நாளில் புதிதாக 742 பேருக்கு கொரோனா; முதியவர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 24 Jan 2022 6:49 PM GMT (Updated: 24 Jan 2022 6:49 PM GMT)

ஒரே நாளில் புதிதாக 742 பேருக்கு கொரோனா; முதியவர் உயிரிழப்பு

திருச்சி, ஜன.25-
திருச்சியில் நேற்று புதிதாக கொரோனா தொற்று 742 பேருக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 569 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். தொடர் சிகிச்சையில் 4,713 பேர் உள்ளனர்.  நேற்று கொரோனாவுக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 68 வயது முதியவர் உயிரிழந்தார். இதுவரை 1,120 பேர் உயிரிழந்துள்ளனர். திருச்சி அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் ஆர்.டி.-பி.சி.ஆர். என்னும் கொரோனா பரிசோதனை நேற்று மட்டும் 5,053 பேருக்கு மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story