துணை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கொரோனா


துணை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கொரோனா
x
தினத்தந்தி 24 Jan 2022 7:37 PM GMT (Updated: 24 Jan 2022 7:37 PM GMT)

துணை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட 40 பேர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். அவர்களிடம் தா.பழூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து ஆய்வக உதவியாளர்கள் சளி மாதிரியை சேகரித்து அரியலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

Next Story