பாளையங்கோட்டை உழவர் சந்தையில் காய்கறிகள் விலை வீழ்ச்சி ஒரு கிலோ தக்காளி ரூ.20-க்கு விற்றது


பாளையங்கோட்டை உழவர் சந்தையில் காய்கறிகள் விலை வீழ்ச்சி ஒரு கிலோ தக்காளி ரூ.20-க்கு விற்றது
x
தினத்தந்தி 24 Jan 2022 7:42 PM GMT (Updated: 24 Jan 2022 7:42 PM GMT)

பாளையங்ேகாட்டை உழவர் சந்தையில் காய்கறிகள் விலை குறைந்தது

நெல்லை:
பாளையங்ேகாட்டை உழவர் சந்தையில் காய்கறிகள் விலை குறைந்தது. ஒரு கிலோ தக்காளி ரூ.20-க்கு விற்றது.
தக்காளி வரத்து அதிகரிப்பு
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வடகிழக்கு பருவமழை அதிகளவு பெய்ததால், தக்காளி செடிகள் அழுகியதால், அவற்றின் விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால் அவற்றின் வரத்து குறைந்து, ஒரு கிலோ ரூ.120-க்கும் அதிகமாக விற்றது. பின்னர் மழை குறைந்ததால் தக்காளியின் வரத்து சற்று அதிகரித்தது. கடந்த பொங்கல் பண்டிகை தினத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.50-க்கு விற்றது.
தற்போது அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் வடிந்து, தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் அவற்றின் வரத்தும் அதிகரித்துள்ளது. இதனால் பாளையங்கோட்டை மகாராஜநகர் உழவர் சந்தையில் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் தக்காளி பழங்களை அதிகளவு வாங்கி சென்றனர். சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.30 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.
இதேபோல் கத்தரிக்காய் விலையும் குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளை கத்தரிக்காய் ரூ.36-க்கும், பச்சை நிற கத்தரிக்காய் ரூ.30-க்கும், நீல நிற கத்தரிக்காய் ரூ.24-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுதவிர மற்ற காய்கறிகளின் விலையும் கணிசமாக குறைந்தது. எனினும் உழவர் சந்தை விலையைவிட சில்லறை விற்பனை கடைகளில் சற்று அதிகமான விலையில் காய்கறிகள் விற்பனை ஆனது.
காய்கறிகள் விலை விவரம்
பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தையில் காய்கறிகள் விலை விவரம் (ஒரு கிலோ) வருமாறு:-
தக்காளி- ரூ.20, கத்தரிக்காய் (வெள்ளை)- 36, பச்சை கத்தரிக்காய்- 30, நீல கத்தரிக்காய்- 24, வெண்டைக்காய்- 20, புடலங்காய்- 20, சுரைக்காய்- 10, பீர்க்கங்காய்- 30, பூசணி- 38, தடியங்காய்- 15, அவரை- 36, மிளகாய்- 70, பல்லாரி- 36, உள்ளி- 60, காராமணி- 36, தேங்காய்- 32, இஞ்சி- 24, முள்ளங்கி- 14, உருளைக்கிழங்கு (புதியது- இந்தூர்)- 22, பழையது (ஆக்ரா)- 16, கேரட்- 70, சவ்சவ்- 10, முட்டைகோஸ்- 44, பீட்ரூட்- 35.

Next Story