அண்ணாசிலை அகற்றம்


அண்ணாசிலை அகற்றம்
x
தினத்தந்தி 24 Jan 2022 7:57 PM GMT (Updated: 24 Jan 2022 7:57 PM GMT)

ஊரணிபுரத்தில் சாலையோரம் இருந்த அண்ணாசிலை அகற்றப்பட்டது. இந்த சிலையை அ.தி.மு.க. அலுவலகம் முன்பு தற்காலிகமாக அ.தி.மு.க. பிரமுகர்கள் வைத்தனர்.

ஒரத்தநாடு:
ஊரணிபுரத்தில் சாலையோரம் இருந்த அண்ணாசிலை அகற்றப்பட்டது. இந்த சிலையை அ.தி.மு.க. அலுவலகம் முன்பு தற்காலிகமாக அ.தி.மு.க. பிரமுகர்கள் வைத்தனர். 
சாலை அகலப்படுத்தும் பணி
தஞ்சை மாவட்டம் ஊரணிபுரம் பிரதான சாலை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அங்கு சாலையோரத்தில் கட்டப்பட்டிருந்த பயணிகள் நிழற்குடை, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி சிலை மற்றும் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் நேற்றுமுன்தினம் பொக்லின் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது. 
அப்போது அண்ணா சிலையை சேதமின்றி தாங்களே சொந்த பொறுப்பில் அகற்றி  கொள்வதாக அ.தி.மு.க. நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர். இதனால் அண்ணா சிலை அகற்றும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 
அண்ணா சிலை அகற்றம்
இந்தநிலையில் நேற்று காலை அ.தி.மு.க. பிரமுகர்கள் முன்னிலையில் அண்ணாசிலை பொக்லின் எந்திரம் மூலம் சேதமின்றி அகற்றப்பட்டது. 
இதனை தொடர்ந்து அகற்றப்பட்ட அண்ணாசிலையை அ.தி.மு.க. பிரமுகர்கள் ஊரணிபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தின் முன்பு தற்காலிகமாக வைத்துள்ளனர்.

Next Story