மதுரையில், 616 பேருக்கு கொரோனா


மதுரையில், 616 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 24 Jan 2022 8:38 PM GMT (Updated: 24 Jan 2022 8:47 PM GMT)

மதுரை மாவட்டத்தில் நேற்று புதிதாக 616 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

மதுரை,

தமிழகத்தில் கொரோனா 3-வது அலையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அந்த வகையில் நேற்று புதிதாக 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்தில் நேற்று புதிதாக 616 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மேலும் அந்த பாதிப்பில் இருந்து 572 பேர் குணமடைந்து வீட்டிற்கு சென்றுள்ளனர். கொரோனாவால் நேற்று 2 பேர் உயிரிழந்துள்ளனர். மதுரையில் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 860 பேர் உள்ளனர். இதில் 3 ஆயிரத்து 620 பேர் வீட்டு தனிமையிலும், மீதம் உள்ளவர்கள் அரசு மற்றம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
-------------

Next Story