சாயல்குடி, கமுதியில் மின்சாரம் நிறுத்தம்


சாயல்குடி, கமுதியில் மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 25 Jan 2022 5:20 AM GMT (Updated: 25 Jan 2022 5:20 AM GMT)

சாயல்குடி, கமுதியில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

சாயல்குடி, 
சாயல்குடி துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் முந்தல் மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை சாயல்குடி அருகே உள்ள கூரான் கோட்டை, மலட்டாறு, கடுகுசந்தை, சத்திரம், பெரியகுளம், ஒப்பிலான், கிருஷ்ணாபுரம், மேல முந்தல் மற்றும் கீழமுந்தல் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என முதுகுளத ்தூர் உதவி செயற்பொறியாளர் மாலதி தெரிவித்துள்ளார்.
இதேபோல கமுதி பசும்பொன் மின் பாதையில், மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் இன்று ( செவ்வாய் கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை பசும்பொன், சடையநேந்தல், புனவாசல், தரைக்குடி, நெடுங்குளம், சோடநேந்தல், வல்லந்தை, இலந்தை குளம் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Next Story