தொழிலாளியின் வீட்டை சேதப்படுத்திய காட்டு யானை


தொழிலாளியின் வீட்டை சேதப்படுத்திய காட்டு யானை
x
தினத்தந்தி 25 Jan 2022 2:40 PM GMT (Updated: 25 Jan 2022 2:40 PM GMT)

கூடலூர் அருகே தொழிலாளியின் வீட்டை காட்டு யானை சேதப்படுத்தியது.

கூடலூர்

கூடலூர் அருகே முதுமலை ஊராட்சிக்கு உட்பட்ட முதுகுளி கிராமத்துக்குள் நேற்றுமுன்தினம் நள்ளிரவு காட்டு யானை ஊருக்குள் புகுந்தது. தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பொதுமக்களின் வீடுகளை முற்றுகையிட்டது. இதனால் கிராம மக்கள் பீதியடைந்தனர். 

தொடர்ந்து அதே பகுதியைச் சேர்ந்த தொழிலாளி. தேவதாஸ் என்பவரது வீட்டை காட்டு யானை உடைத்து சேதப்படுத்தியது. இதையடுத்து கிராம மக்கள் திரண்டு வந்து காட்டு யானையை விரட்டி அடித்தனர்.

 இதனிடையே அப்பகுதியில் பயிரிட்டு இருந்த மரவள்ளி கிழங்கு, வாழை உள்ளிட்ட விவசாய பயிர்களை காட்டு யானை உடைத்து சேதப்படுத்தியது. இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறும் போது, வனப்பகுதியில் போதிய பசுந்தீவனம் கிடைக்காததால் காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் இனிவரும் நாட்களில் அதிக அளவு ஊருக்குள் வர வாய்ப்புள்ளது. 

எனவே வனத்துறையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி ஊருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story