மலைரெயில் பாதையில் உலா வந்த காட்டுயானைகள்


மலைரெயில் பாதையில் உலா வந்த  காட்டுயானைகள்
x
தினத்தந்தி 25 Jan 2022 2:41 PM GMT (Updated: 25 Jan 2022 2:41 PM GMT)

குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே மலைரெயில் பாதையில் காட்டுயானைகள் உலா வந்தன.

குன்னூர்

நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு, மேட்டுப்பாளையத்தில் இருந்து மலையில் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மலைரெயில்களில் பயணிகள் சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். 

இந்த நிலையில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை மாதங்களில் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பர்லியாறு, மரப்பாலம், கே.என்.ஆர்.நகர் பகுதியில் பலாப்பழ சீசன் தொடங்கும். இதையொட்டி சமவெளிகளில் உள்ள காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக இந்த பகுதிக்கு வரும்.

இந்த நிலையில் தற்போது குன்னூர் பகுதியில் பனியுடன் வறண்ட வானிலை நிலவி வருகிறது. இதனால் சமவெளி வனப்பகுதியில் இருந்து பர்லியாறு வனப்பகுதிக்கு காட்டு யானைகள் வர தொடங்கியுள்ளன. இவ்வாறு வந்த காட்டு யானகைள் குட்டியுடன் குன்னூர்-மேட்டுப்பாளையம் ரெயில்பாதையில் ஹில்குரோவ் மற்றும் ரன்னிமேடு பகுதியில் உலா வருகின்றன. 

மேலும் இந்த காட்டு யானைகள் ரெயில் நிலையங்களுக்கு செல்லும் தண்ணீர் குழாய்களை உடைத்து சேதப்படுத்தி வருகின்றன. தற்போது அந்த பகுதியில் மண்சரிவை தடுக்க தடுப்பு சுவர் கட்டும்பணி நடைபெற்றது வருகிறது. 

இந்த நிலையில் அங்கு காட்டு யாகைள் உலா வருவதால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே காட்டு யானைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் யானைகளின் கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Next Story