ஆர்.எஸ்.எஸ். நிர்வாகியை தாக்கிய 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


ஆர்.எஸ்.எஸ். நிர்வாகியை தாக்கிய  2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 25 Jan 2022 2:46 PM GMT (Updated: 25 Jan 2022 2:46 PM GMT)

ஆர்.எஸ்.எஸ். நிர்வாகியை தாக்கிய 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கம்பம்:

கம்பம் தாத்தப்பன்குளம் தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 45). ஆர்.எஸ்.எஸ். நிர்வாகியான இவரை, கடந்த 6-ந்தேதி 2 பேர் வழிமறித்து சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

 இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில், கம்பம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து கம்பம் பெரியபள்ளிவாசல் தெருவை சேர்ந்த வாஜித் (36), கம்பம் மெட்டு காலனியை சேர்ந்த சதாம்உசேன் (31) ஆகியோரை கைது செய்தனர். தற்போது இவர்கள், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் வாஜித், சதாம் உசேனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய தேனி கலெக்டர் முரளிதரனிடம், போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே பரிந்துரை செய்தார். இதனையடுத்து அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இதற்கான உத்தரவை, கம்பம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் லாவண்யா சிறைத்துறையினரிடம் வழங்கினார்.

Next Story