புதிதாக 3,763 பேருக்கு கொரோனா


புதிதாக 3,763 பேருக்கு கொரோனா
x
புதிதாக 3,763 பேருக்கு கொரோனா
தினத்தந்தி 25 Jan 2022 3:58 PM GMT (Updated: 25 Jan 2022 3:58 PM GMT)

புதிதாக 3,763 பேருக்கு கொரோனா

கோவை

கோவை மாவட்டத்தில் கொரோனா 3-வது அலையின் தாக்கம் இந்த மாதம் தொடக்கத்தில் தென்பட்டது. அப்போது தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடுவென உயர தொடங்கியது. கடந்த 13-ந் தேதி ஒரே நாளில் 1,162 பேருக்கு தொற்று உறுதியானது. 

அதுவே 17-ந் தேதி 2 ஆயிரத்து 42 ஆக அதிகரித்தது. இவ்வாறு உயர்ந்து 3,000-க்கும் மேல் சென்றது.
இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி ஒரே நாளில் 3,912 பேர் பாதிக்கப்பட்டனர்.

 அதன் பிறகு நேற்று முன்தினம் பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து 3,786 பேருக்கு கொரோனா உறுதியானது. அதுவே நேற்று 2-வது நாளாக மேலும் தொற்று எண்ணிக்கை குறைந்து புதிதாக 3 ஆயிரத்து 763 பெயருக்கு கொரோனா உறுதியானது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 95 ஆயிரத்து 184 ஆக அதிகரித்தது. அத்துடன் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கியது.

மேலும் நேற்று ஒரே நாளில் 2,384 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர். அதன்படி இதுவரை 2 லட்சத்து 66 ஆயிரத்து 458 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 72 வயது மூதாட்டி மற்றும் 90 வயது முதியவர் என 2 பேர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தனர். 

இதனால் மாவட்டத்தில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 548 ஆக அதிகரித்தது. மேலும் கோவை அரசு ஆஸ்பத்திரி, இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி, கொரோனா சிகிச்சை மையங்கள் மற்றும் வீடுகளில் 26 ஆயிரத்து 178 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story