கோவை போலீஸ் அதிகாரிகள் உள்ப6 பேருக்கு ஜனாதிபதி பதக்கம்


கோவை போலீஸ் அதிகாரிகள் உள்ப6 பேருக்கு ஜனாதிபதி பதக்கம்
x
கோவை போலீஸ் அதிகாரிகள் உள்ப6 பேருக்கு ஜனாதிபதி பதக்கம்
தினத்தந்தி 25 Jan 2022 4:51 PM GMT (Updated: 25 Jan 2022 4:51 PM GMT)

கோவை போலீஸ் அதிகாரிகள் உள்ப6 பேருக்கு ஜனாதிபதி பதக்கம்

கோவை, ஜன

குடியரசு தினத்தை முன்னிட்டு மத்திய அரசின் சார்பில் காவல்துறை அதிகாரிகளுக்கான ஜனாதிபதி பதக்கப் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது. இந்திய முழுவதும் 939 போலீஸ் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். இதில் தமிழக அளவில் 20 போலீஸ் அதிகாரிகள் விருது பெறுகின்றனர்.

அதன்படி, கோவையில், மேற்கு மண்டல ஐ.ஜி. ஆர்.சுதாகர், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப் குமார், கோவை மாநகர காவல்துறையின் போக்குவரத்து மற்றும் திட்டமிடல் பிரிவின் கூடுதல் துணை கமிஷனர் வி.இளங்கோவன், கோவை மாநகர காவல்துறையின் நுண்ணறிவுப் பிரிவு உதவி கமிஷனர் எஸ்.முருகவேல், கோவை மாநகர சி.பி.சி.ஐடி ஒசியூ பிரிவு துணை சூப்பிரண்டு எம்.முரளிதரன் ஆகியோருக்கு பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பதக்கம் சம்பந்தப்பட்டவர்களுக்கு விரைவில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கோவை நகர ஊர்க்காவல்படை கமாண்டன்ட் (பிரதேச தளபதி) ஆக பணியாற்றி வருபவர் தனசேகர் (வயது51). இவர் கடந்த 15 ஆண்டுகளாக ஊர்க்காவல் படையில் பல்வேறு சேவைகளை செய்துள்ளார். இவரது சேவையை பாராட்டி ஜனாதிபதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story